Published : 20 Jul 2017 08:50 AM
Last Updated : 20 Jul 2017 08:50 AM

பாம்பனில் பலத்த சூறாவளிக் காற்று: பாதி வழியில் நின்ற ரயில்கள்

ராமேசுவரம் பாம்பன் ரயில் பாலத்தில் நேற்று பலத்த சூறாவளிக் காற்று வீசியதால், ரயில்கள் தாமதமாக கடந்து சென்றன.

பாம்பன் பகுதி மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடற்பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால், பாம்பன் ரயில் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கைக்காட்டி பலத்த காற்றால் பச்சை சிக்னல் காட்டவில்லை.

இதையடுத்து, மண்டபத்தில் இருந்து புறப்பட்ட மதுரை பயணிகள் ரயில், பாம்பன் ரயில் பாலம் அருகே பிற்பகல் 3 மணியளவில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரமாக ரயில் நிறுத்தப்பட்டதால், பொறுமை இழந்த பயணிகள் மாலை 5 மணியளவில் ரயிலில் இருந்து இறங்கி ராமேசுவரத்துக்கு பேருந்தில் சென்றனர்.

மேலும், ராமேசுவரத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்ட ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில் பாம்பன் அருகேயும், 5.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை-ராமேசுவரம் பயணிகள் ராமேசுவரம் ரயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டன. நிலையில்லாத வேகத்தில் காற்று வீசுவதால், அனைத்து ரயில்களும் தாமதமாக பாம்பன் பாலத்தை கடந்து செல்வதாக, ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் அனைத்து ரயில்களும் சுமார் 3 மணி நேரம் தாமதமாயின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x