

நவீன வசதிகளுடன் ரூ.28 கோடியே 85 லட்சத்தில் கட்டப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியை முதல்வர் கே.பழனிசாமி திறந்துவைத்தார்.
சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் களுக்காக ரூ.28 கோடியே 85 லட்சம் மதிப் பில் புதிய விடுதிக் கட்டிடம் கட்டப் பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமைத் தாங்கினார். துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல்வர் கே.பழனிசாமி, மாணவர் விடுதி கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்தையும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஜெயக் குமார், கே.ஏ.செங்கோட்டையன், மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எட்வின் ஜோ, சென்னை மருத்துவக் கல்லூரி டீன் நாராயண பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.