

சென்னை மாநகராட்சியில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக சாலையோரம் நீர் தேங்கும் பகுதிகளில் படிந்து மண் மற்றும் மழைநீர் வழிந்தோடும் துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் ஆகியவற்றை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பராமரிப்பில் 387 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 471 பேருந்து தடச் சாலைகள் உள்ளன. இதில், 30 நிமிட மழைக்கே நீர் தேங்கும் இடங்களாக, 500-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த சாலைகளின் ஓரங்களில் உள்ள மழைநீர் வடிகால்களில், டிசம்பர் 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பிறகே, தூர்வாரப்பட்டன. அதுவரை தூர்வாரப்படாமல், தூர்ந்துபோய் கிடந்தன. அதனால் அந்த சாலைகளின் ஓரங்களில் படிந்துகிடந்த மண்ணை மாநகராட்சி நிர்வாகம் அகற்றவில்லை. அகற்றினாலும் பயன் இல்லை.
இந்நிலையில் தற்போது தமி ழகத்தில் தென்மேற்கு பருவக் காற்றின் தாக்கம் காரணமாக, சென்னையில் ஓரளவு மழை பெய்து வருகிறது. சுமார் 30 நிமிடங்கள் பெய்தாலே, சாலையோரங்களில் மழைநீர் தேங்கிவிடுகிறது. மழைநீர் வடிகால் துளைகளை அடைத்துக்கொண்டு படிந்துள்ள மண், அகற்றப்படாததால்தான் இந்நிலை ஏற்படுகிறது. இதனால் மழை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் விதமாக, பேருந்து தடச் சாலையோர மழைநீர் வடிகால்களில் தூர் வாரப்பட்டு இருப்பதால், சாலை யோரங்களில் துளைகளை அடைத் துக்கொண்டுள்ள மண்ணை அகற்றும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக சாலையோரம் படிந்துள்ள மண் அகற்றப்பட்டு வருகிறது. மழை நீர் எளிதில் மழைநீர் வடிகாலுக்கு வழிந்தோடிச் செல்லும் விதமாக துளைகளில் உள்ள மண் அடைப்பு கள் அனைத்தும் நீக்கப்பட்டு வரு கிறது. அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையின்போது, பேருந்து சாலைகள் எதிலும் மழைநீர் தேங்காமல் இருக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது என்றார்.