பொறியியல் தேர்வுக்கு திட்டமிட வசதி: தேர்வுகால அட்டவணை முன்கூட்டியே வெளியீடு - விடுமுறை நாட்களும் அறிவிப்பு

பொறியியல் தேர்வுக்கு திட்டமிட வசதி: தேர்வுகால அட்டவணை முன்கூட்டியே வெளியீடு - விடுமுறை நாட்களும் அறிவிப்பு
Updated on
1 min read

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி ஜி.வி.உமா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 627 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கி வரு கின்றன. ஒவ்வொரு பருவகால தேர்வுகளும், ஒழுங்காகவும் மிகுந்த கவனத்தோடும் நடத்தப் பட்டு வருகின்றன. இனிவரும் காலங்களில் செய்முறைத் தேர்வுக்கும், எழுத்துத் தேர்வுக்கும் ஆண்டின் தொடக்கத்திலேயே கால அட்டவணை வெளியிடப் படும். இதனால், மாணவர்களின் மன அழுத்தம் குறைவதுடன் அவர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே தயாராக முடியும்.

நடப்பு பருவகால தேர்வுக் கால அட்டவணை: (ஜூலை - நவம்பர் 2017)

1. இறுதித் தேர்வுகள் அட்ட வணை வெளியீடு - ஜூலை 24, கடைசி வேலை நாள் - அக்டோ பர் 21, செய்முறைத் தேர்வுகள் - அக்டோபர் 25 முதல் 28 வரை, இறுதித்தேர்வுகள் - அக்டோபர் 30 முதல் நவம்பர் 30 வரை, விடுமுறை - டிசம்பர் 17 வரை, அடுத்த பருவம் தொடங்கும் நாள் - டிசம்பர் 18, தேர்வுகளை டிசம்பர் 18-ம் தேதிக்குள் முடிப்பதால் மாணவர்களுக்கு 2 வாரம் முதல் 4 வாரங்கள் வரை குளிர்கால விடுமுறையும், 4 வாரம் முதல் 6 வாரம் வரை கோடைகால விடுமுறையும் கிடைக்கும். பல்கலைக்கழகம் அளித்துள்ள பாடம் மற்றும் மதிப்பீடு அட்டவணைகளை அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும். தவறும் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இறுதி தேர்வுகளுக்கான கால அட்டவணை பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் (www.annauniv.edu) காணலாம். பிற தேர்வுகளுக்கான கால அட்டவணை வருகிற 24-ம் தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in