குமரியில் வெங்கடாசலபதி கோயில் திருப்பணி 6 மாதத்தில் நிறைவு பெறும்: திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தகவல்

குமரியில் வெங்கடாசலபதி கோயில் திருப்பணி 6 மாதத்தில் நிறைவு பெறும்: திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தகவல்
Updated on
1 min read

``கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் திருப்பணி 6 மாதங்களில் நிறைவடைந்து, கும்பாபிஷேகம் நடைபெறும்” என திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில், கடற் கரையை ஒட்டி, திருப்பதி தேவஸ் தானம் சார்பில் ரூ.30 கோடி மதிப் பில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டு வருகிறது. பெருமாள் சந்நிதி மட்டுமின்றி, பத்மா வதி தாயார், ஆண்டாள், மூலஸ் தானம், தெப்பக்குளம், கோசாலை, முடிக்காணிக்கை செலுத்தும் இடம், திருமண மண்டபம் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன. இப்பணிகளை, திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘இக் கோயில் திருப்பணிகள் 6 மாதங் களில் நிறைவடைந்து கும்பாபி ஷேகம் நடைபெறும். திருப்பதி கோயில் பிரசாதமான லட்டுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்ப தாக கூறுவது தவறு. திருப்பதியில் ரூ.1000-க்குள் உள்ள தங்கும் அறை களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை. 80 சதவீத தங்கும் அறைகள் 1000 ரூபாய்க்கும் குறைவான கட்டணத் தில் தான் வருகின்றன” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in