ஊர் திரும்பும் வேளையில் உயிரிழந்த பரிதாபம்: அதே துறையை சேர்ந்த சகோதரர் உருக்கம்

ஊர் திரும்பும் வேளையில் உயிரிழந்த பரிதாபம்: அதே துறையை சேர்ந்த சகோதரர் உருக்கம்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில் வசித்துவந்த ஏகராஜ், அந்த மாவட்ட தலைமை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்துள் ளார். ஆட்கள் பற்றாக்குறை காரணமாக கொருக்குப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு 15 நாட்கள் தற்காலிகமாக பணியாற்ற வந்துள்ளார். அவரோடு அவரது சகோதரரும் தீயணைப்பு வீரரு மான முத்துகிருஷ்ணன் எஸ்.எம்.நகர் தீயணைப்பு நிலையத்தில் தற்காலிகமாக பணிக்காக வந் துள்ளார்.

இதுகுறித்து முத்துகிருஷ்ணன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கொடுங்கையூர் உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து நான் பணியாற்றி வந்த எஸ்.எம்.நகர் தீயணைப்பு நிலையத்துக்குதான் முதலில் தகவல் வந்தது. பின்னர், வேறொரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் நான் அங்கு சென்றுவிட்டேன். அதற்கு பதில் கொருக்குப்பேட்டை தீயணைப்பு நிலையத்திலிருந்து எனது அண் ணன் உள்ளிட்ட வீரர்கள் கொடுங்கையூர் சென்றுள்ளனர்.

தீயணைப்பு துறையில் கடந்த 27 ஆண்டுகளாக எனது அண்ணன் பணியாற்றி வருகிறார். அவருக்கு இதுவரை எந்த பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. மீட்புப் பணியின்போது உயிரை துச்சமென மதித்து வேலை பார்க்கக்கூடியவர். எந்த இடர்பாட் டின்போதும் பணி செய்ய அவர் தயங்கியதில்லை. நேற்று முன் தினம் நடந்த விபத்திலும் அவ் வாறுதான் செயல்பட்டுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சிதறியதால் தலையில் அடிபட்டு, அவர் உயிரி ழந்துள்ளார். பணி முடித்து இரு வரும் நாளை (இன்று) ஒன்றாக கிளம்ப திட்டமிட்டிருந்தோம். அதற் குள் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டது” என்று வேதனையோடு தெரிவித்தார்.

உடல் ஒப்படைப்பு

ஏகராஜூவுக்கு பழனிசெல்வி என்ற மனைவியும், வீரமணிகண் டன், விஜயசரவணன் ஆகிய 2 மகன்களும், விஷ்ணுபிரியா என்ற மகளும் உள்ளனர். இதில், விஜயசரவணண் திருத் தணியில் தீயணைப்பு நிலையத் தில் ஓட்டுநராக இருக்கிறார். உயிரிழந்த ஏகராஜின் உடல் நேற்று மதியம் உறவினர்களி டம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், இறுதிச் சடங்குகளுக்காக உடலை அவரது உறவினர்கள் விருதுநகர் கொண்டு சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in