நிறுவனங்களுக்கு ஆதரவாக மோடி அரசு செயல்படுகிறது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

நிறுவனங்களுக்கு ஆதரவாக மோடி அரசு செயல்படுகிறது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நல கூட்டியக்கத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

நாடாளுமன்றத்தில் நள்ளிரவு ஆற்றிய உரையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது ஏழை களுக்கும் நடுத்தர மக்களுக்கும் சாதகமானது என மோடி தெரி வித்தார். ஆனால் ஹோட்டல் உணவுக்குகூட வரி அதிகரிக் கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கிறது. சிவகாசி, கோவில்பட்டி, திருப்பூர், கோவையில் சிறு உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒருமுனை வரி என சொல்லிவிட்டு, வரிகளை உயர்த்துவதா?

திருப்பூர் பனியன் தொழிலை நம்பியிருக்கும் சிறு தொழில் களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. வெட் கிரைண்டருக்கும் வரி உயர்த்தப் பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்தும் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 550 பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இவற்றுக் கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

சிறு தொழில்களை அழித்து, பெரு நிறுவனங்களுக்கு ஆதர வாக பிரதமர் மோடி செயல் படுகிறார். தன்னை சந்தைப் படுத்திக்கொள்வதில் மோடி கெட்டிக்காரர். இவ்வாறு ராமகிருஷ்ணன் பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும்போது, ‘‘எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஜிஎஸ்டியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. குஜராத் முதல்வராக இருந்தபோது ஜிஎஸ்டிக்கு மோடி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், பிரதமர் ஆனதும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். வரி அதிகமாக இருப்பதால்தான் வரி ஏய்ப்பு செய்கின்றனர். வரியை குறைத்தால் அனைவரும் வரி செலுத்துவார்கள். கந்துவட்டி கும்பலைபோல ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in