கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 13-ம் ஆண்டு நினைவு நாள்: 94 குழந்தைகளின் பெற்றோர் கண்ணீர் அஞ்சலி

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 13-ம் ஆண்டு நினைவு நாள்: 94 குழந்தைகளின் பெற்றோர் கண்ணீர் அஞ்சலி
Updated on
1 min read

பொதுமக்கள் ஊர்வலம், மகாமக குளத்தில் மோட்ச தீபம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 13-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில், 94 குழந்தைகளை இழந்த பெற்றோர், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மகாமகக் குளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 94 குழந்தைகள் உயிரிழந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தின் 13-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக் கப்பட்டது. இதையொட்டி, குழந்தைகளை இழந்த பெற்றோர் நேற்று காலை வீடுகளில் குழந்தைகளின் படங்களுக்கு மாலை அணி வித்து, பிடித்த திண்பண்டங் களை வைத்துப் படையலிட்டனர்.

பின்னர், தீ விபத்து நேரிட்ட பள்ளியின் முன் கூடினர். அங்கு, 94 குழந்தைகளின் படங்கள் அச்சிடப்பட்ட டிஜிட்டல் போர்டு வைத்து மாலை அணிவிக்கப்பட் டிருந்தது. தங்கள் குழந்தைகளை நினைத்து கண்ணீர் விட்டு கதறி அழுத பெற்றோர் அங்கு மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பள்ளியிலிருந்து பெற் றோர்கள், பொதுமக்கள் ஊர்வல மாகப் புறப்பட்டு பாலக்கரையில் உள்ள, பலியான குழந்தைகளின் நினைவு ஸ்தூபிக்குச் சென்றனர். அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நினைவிடத்தில் கும்பகோணம் உதவி ஆட்சியர் பிரதீப்குமார், அரசியல் கட்சியினர், இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் உள் ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், நேற்று மாலை பள்ளியிலிருந்து குழந்தைகளை இழந்த பெற்றோர் அகல் தீபத்துடன் ஊர்வலமாகச் சென்று மகாமகக் குளக்கரையில் மோட்ச தீபம் ஏற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in