

ஜிஎஸ்டி வரியால் அத்தியாவசிய மருந்துகளின் விலை 2.3 சதவீதம் உயர்கிறது என்று இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.ஜெயசீலன் தெரிவித்தார்.
இந்திய மருந்து உற்பத்தியாளர் கள் சங்கத்தின் (தமிழகம், புதுச் சேரி, கேரளா) சார்பில் “பார்மாக் சவுத்-2017” என்ற பெயரில் இரண்டு நாள் கண்காட்சி மற்றும் கருத் தரங்க தொடக்க விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. சங்கத்தின் தலை வர் ஜெ.ஜெயசீலன் விழாவுக்கு தலைமைத் தாங்கினார். தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் (பொறுப்பு) சிவபாலன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
சங்கத்தின் தலைவர் ஜெ.ஜெய சீலன் கூறியதாவது:
மருந்து உற்பத்தியாளர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் புதிதாக உருவாகிக் கொண்டிருக் கும் வாய்ப்புகள் குறித்து விவாதிக் கவும், தெரியப்படுத்தவும் இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்துகிறோம். மருந்து உற்பத்தி யாளர்கள் கண்காட்சியில் 64 அரங்குகள் அமைத்துள்ளனர். ஜிஎஸ்டி வரியால் 20 சதவீத அத்தி யாவசிய மருந்துகளின் விலை 2.3 சதவீதம் உயர்கிறது. 80 சதவீத மருந்துகளின் விலை உயராது.
மத்திய அரசு ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையைக் கொண்டு வர உள்ளது. அதற்காக மாநில அரசுகள் மற்றும் மருந்து உற்பத்தி யாளர்கள் மற்றும் மருந்து வணிகர் களின் கருத்துகளைக் கேட்டனர். டாக்டர் சீட்டு இல்லாமல் விற்கப் படும் மருந்துகளை மட்டும் ஆன் லைனில் கொண்டு வரலாம் என்று எங்கள் கருத்தை தெரிவித்து இருக்கிறோம்.
இவ்வாறு ஜெ.ஜெயசீலன் தெரிவித்தார்.
மருந்து கட்டுப்பாட்டுத் துறை யின் இயக்குநர் (பொறுப்பு) கே.சிவ பாலன் கூறியதாவது:
மருந்து வணிகர்கள் எப்போதும் ஒரு மாதத்துக்கு தேவையான மருந்துகளை கொள்முதல் செய்து வைத்திருப்பார்கள். ஜிஎஸ்டி வரி யால் ஒரு வாரத்துக்கு மட்டும் மருந்துகளை வாங்கி வைத்திருந் தனர். இதனால் மருந்துகள் கிடைப் பதில் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில் மருந்து தட்டுப்பாடு சரியாகிவிடும். மருந்து தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் www.drugscontrol.tn.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க லாம். இணையதளத்தில் அதிகாரி களின் எண்கள் கொடுக்கப்பட் டுள்ளது. இவ்வாறு கே.சிவபாலன் தெரிவித்தார்.
இந்த கண்காட்சி மற்றும் கருத் தரங்கில் சங்கத்தின் தேசிய தலை வர் தீப்நாத் ராய் சவுத்ரி, முன்னாள் தலைவர் எஸ்.வி.வீர மணி, விழாக் குழு தலைவர் எம்.ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.