

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது நடந்து வருகிறது. வரும் 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.
இதில், தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தொடர் அனுமதி குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாகவும், நீட் தேர்வுக்கு விலக்கு பெற மத்திய அரசை வலியுறுத்துவது, உயர் நீதிமன்ற தடை தொடர்பாகவும், பேரவையில் ஜெயலலிதா படத்தை திறப்பது தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.