தஞ்சை வல்லம் பகுதியில் அரசு பேருந்து விபத்துக்குள்ளானது: 9 பேர் பலி

தஞ்சை வல்லம் பகுதியில் அரசு பேருந்து விபத்துக்குள்ளானது: 9 பேர் பலி
Updated on
1 min read

தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் அரசு பேருந்தும் மினி லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காயமடைந்துள்ளனர்.

திருப்பூரிலிருந்து கும்பகோணம் சென்ற அரசு பேருந்து வல்லம் அருகே மினி லாரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி பயங்கரவிபத்து ஏற்பட்டது. இதில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் மினிலாரி ஓட்டுநர் உட்பட 9 பேர் பலியானதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசுப் பேருந்தில் பயணம் செய்த 60 பேர்களில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in