நாடாளுமன்ற எம்.பி.க்கள் கிராம வளர்ச்சித் திட்டம்: 25 தமிழக எம்.பி.க்களின் பட்டியல் வெளியீடு; தத்தெடுப்புக்கான காலக்கெடு முடிந்தது

நாடாளுமன்ற எம்.பி.க்கள் கிராம வளர்ச்சித் திட்டம்: 25 தமிழக எம்.பி.க்களின் பட்டியல் வெளியீடு; தத்தெடுப்புக்கான காலக்கெடு முடிந்தது
Updated on
2 min read

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கிராம வளர்ச்சித் திட்டத்தில் கிராம தத்தெடுப்புக்கான காலக்கெடு கடந்த 10-ம் தேதி முடிந்து விட்ட நிலையில், 25 எம்.பி.க்களின் கிராமப் பட்டியல்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அறிவித்த நாடாளுமன்ற எம்.பி.க்களின் கிராம வளர்ச்சித் திட்டத்தில், இந்தியாவிலுள்ள அனைத்து 800 எம்.பி.க்களும் தங்களுக்கென ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதன் வளர்ச்சிப் பணிகளுக்கு, தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிட வேண்டும்.

இதன் படி, அனைத்து மக் களவை எம்.பி.க்களும் தங்கள் தொகுதிக்குட்பட்ட ஒரு கிரா மத்தையும், மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்கள் மாநிலத் துக்குட்பட்ட கிராமத்தையும், கிராமங்கள் இல்லாத நகர்ப்புற தொகுதி எம்.பி.க்கள் தங்கள் தொகுதியை ஒட்டியுள்ள மற்ற தொகுதியின் கிராமத்தைத் தத்தெடுக்க வேண்டும். இதே போல் நியமன எம்.பி.க்கள் நாட்டில் ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்யலாம்.

தேர்வு செய்யும் கிராமங்களில் குறைந்தது 3000 முதல் 5000 வரை மக்கள் தொகை இருக்க வேண்டும். மலை வாழ் பகுதிகளில் 1000 முதல் 3000 பேர் வரை இருக்கும் கிராமங்களை தேர்வு செய்யலாம்.

இந்தக் கிராமங்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கல்வி, சுகாதாரம், வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு செலவு செய்ய வேண்டும். ஒவ்வொரு எம்.பியும் வரும் 2016க்குள் ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து அதனை முன்னேற்ற வேண்டும்.

2016க்குப் பின் 2019க்குள் ஒவ்வொரு எம்.பி.யும் இன்னும் இரண்டு கிராமங்களை தேர்வு செய்து, பின்னர் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு கிராமம் தத்தெடுக்க வேண்டும்.

இதன்படி, கிராமங்களை தேர்ந்தெடுப்பதற்கு நவம்பர் 10-ம் தேதியை கடைசி தேதியாக, மத்திய ஊரக வளர்ச்சித் துறை கெடு விதித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தமுள்ள 58 எம்.பி.க்களில், கிராமங்களை தத்தெடுத்த 25 எம்.பிக்களின் பட்டியல் மட்டுமே மத்திய அரசுக்கு தமிழக ஊரக வளர்ச்சித் துறையிலிருந்து அனுப்பப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பல எம்.பி.க்களின் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கோப்புகளாக நிற்பதாகவும், அதிமுக எம்.பி.க்களின் கிராமங்களில் சில மாற்றங்கள் நடப்பதால், தாமதமாவதாகவும், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

எனவே, இன்னும் ஒரு வாரத்துக்குள் இறுதி செய்யப் பட்ட பட்டியலை அதிகாரப்பூர்வ மாக அனுப்புமாறு, மாநில ஊரக வளர்ச்சித் துறைக்கு மத்திய அரசிலிருந்து கடிதங்கள் வந் துள்ளன. டிசம்பர் முதல் வாரத்தில் கிராமங்களை தத்தெடுத்துள்ள அனைத்து 58 எம்.பி.க்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

கோடநாட்டைத் தத்தெடுத்த அதிமுக எம்.பி.

அதிமுக மக்களவை எம்.பி. கோபாலகிருஷ்ணன் நீலகிரி மாவட்டத்திலுள்ள கோடநாடு கிராமத்தை தத்தெடுத்துள்ளார். கோடநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அங்கு அடிக்கடி ஜெயலலிதா சென்று தங்குவது வழக்கம்.

மாநிலங்களவை எம்.பி.க் களில் திமுகவின் நான்கு எம்.பி.க்களில் கனிமொழி தூத்துக்குடி வெங்கடேஸ்வரபுரம் கிரா மத்தை தேர்வு செய்துள்ளார், இவரது பெயர் இன்னும் பட்டிய லில் இடம்பெறவில்லை. தங்கவேலு திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள வடக்குப்புதூரைத் தேர்வு செய்துள்ளார். கே.பி.ராமலிங்கம், திருச்சி சிவா பட்டியல் இன்னும் மத்திய அரசுக்கு கிடைக்கவில்லை.

காங்கிரஸின் சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கை மறவன் மங்கலம், அதிமுகவின் கே.ஆர்.அர்ஜுனன் நீலகிரி கஞ்சம்பனை ஆகிய கிராமங்களைத் தேர்ந் தெடுத்துள்ளனர். பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி முத்தாலக்குறிச்சி யையும், பாமகவின் அன்புமணி ராமதாஸ், தர்மபுரி மோட்டன் குறிச்சியையும் தேர்வு செய் துள்ளனர்.

அதிமுக மக்களவை எம்.பி.க் கள் சந்திரகாசி திருவள்ளூர் கீழப்பாலூர் கிராமம், அருண் மொழித் தேவன் கடலூர் போதிர மங்கலம் கிராமம், எம்.உதயக் குமார் திண்டுக்கல் ரகளபுரம், அசோக்குமார் கிருஷ்ணகிரி ஜவலகிரி, செந்தில்நாதன் சிவகங்கை திருமணவாயல், பார்த்திபன் தேனி ராசிங்கபுரம், வனரோஜா திருவண்ணாமலை மேல்ரவந்தன்வாடி, ஏழுமலை வெள்ளைக் கவுண்டர் திருவண்ணாமலையின் பள்ளி, டாக்டர் காமராஜ் விழுப்புரம் க.அலம்பலம், ராஜேந்திரன் விழுப்புரம் திருவக்கரை ஆகிய வற்றைத் தேர்வு செய்துள்ளனர்.

கிருஷ்ணன் நாராயணசாமி பெரும்புதூர் வல்லக்கோட்டை, மரகதம் குமரவேல் அச்சரப்பாக்கம் ஒரத்தி, டாக்டர் ஜெயவர்தன் காஞ்சிபுரம் ஒட்டியம்பாக்கம், மருதராஜா பெரம்பலூர் சிறுவாச்சூர், பரசுராமன் தஞ்சை பேராவூரணி ஒட்டன்காடு, பாரதி மோகன் திருவிடைமருதூர் திருமங்கலக்குடி, பி.குமார் திருச்சி தாயனூர், பிரபாகரன் திருநெல்வேலி கீழப்பாவூர் பெத்தநாடார் பட்டி, வசந்தி வாசுதேவநல்லூர் விஸ்வநாதபேரி ஆகியவற்றைத் தேர்வு செய் துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in