

தமிழகத்தில் உள்ள ஐஒசி காஸ் நிரப்பும் தொழிற்சாலையில் பணி புரியும் இண்டேன் காஸ் லாரி ஓட்டுநர்கள் வரும் 11-ம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளர்.
மணலி ஐஒசி தொழிற்சாலை கட்டும்போது அமுல்லைவாயல் பகுதி மக்கள் நிலம் கொடுத்தனர். நிலம் வழங்கிய மக்களுக்கு வேலை வழங்கப்படும் என ஐஓசி நிர்வாகம் தெரிவித்தது. அதன் அடிப்படையில் நிலம் வழங்கியவர்கள் அந்த தொழிற்சாலையில் லாரி ஓட்டுதல் மற்றும் காஸ் சிலிண்டர்களை கையாளுதல் ஆகிய பணிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒப்பந்தத்தை காஸ் விநியோகஸ் தர்கள் எடுத்துள்ளனர். அவர்கள் ஏற்கெனவே உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிக்கு ஏற்க மறுத்ததால் ஐஒசி நிர்வாகம் கடந்த மாதம் 15-ம் தேதி முன்னறிவிப்பு இல்லாமல் அவர்களை பணிநீக்கம் செய்தது.
இதையடுத்து கடந்த மாதம் 29 முதல் 30-ம் தேதி வரை 3 முறை அம்பத்தூர் வருவாய் அலுவலர், ஐஒசி நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கூடிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் மணலி ஐஒசி தொழிற் சாலையில் நேற்று முன்தினம் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியாட்கள் மூலம் சிலிண்டர்களை எடுத்துச் சென்ற லாரிகளை தடுத்து நிறுத்த முற்பட்டனர். பின்னர் போலீஸ் தலையிட்டதால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மணலி ஐஒசி தொழிற்சாலையில் இருந்து தினமும் 90 லாரிகள் மூலம் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன. ஆனால் பிரச்சினை தொடங்கியதிலிருந்து இதுவரை 36 லாரி லோடுகள் மட்டுமே விநியோகம் செய்யப் பட்டுள்ளன.
இந்நிலையில் வரும் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 11 ஐஒசி காஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் லாரி ஓட்டுநர்கள் ஸ்டிரைக் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு பெட் ரோலியம் காஸ் ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) பொது செயலாளர் கே.விஜயன் கூறும்போது, “மற்ற ஐஒசி தொழிற்சாலையில் இருப் பது போல் பழைய ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் எடுத்துக் கொள்ள வேண்டும். மணலி தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலா ளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள 11 ஐஒசி காஸ் தொழிற்சாலைகளில் பணிபுரியும் லாரி ஓட்டுநர்கள் வரும் 11-ம் தேதி ஸ்டிரைக் நடத்த முடிவு செய்துள் ளோம்'' என்றார்.
மணலி தொழிற்சாலையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடை பெற்று வருவதால் ஸ்டிரைக் அறிவித்துள்ள அன்றைய தினம் சென்னை தொழிலாளர் வாரிய ஆணையர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.