

அனைவருக்கும் வீடு திட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு குடியிருப்பு அளிக்கவும், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி பேசும்போது, ‘‘மாவட்டத் தலை நகரங்களில் பணியாற்றும் பத்திரி கையாளர்களுக்கு அரசு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். பத்திரிகையாளர்களுக்கான நல வாரியம் அமைக்க வேண்டும். அவர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தலைமைச் செயலகத் தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையை விரிவாக்கம் செய்ய வேண்டும்’’ என்றார்.
அதற்கு பதிலளித்த செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘‘அனைவருக்கும் வீடு திட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு வீடுகள் வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பத் திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தைப் பொறுத்த வரை, கடந்த 2011-ம் ஆண்டு ரூ.5 ஆயிரமாக இருந்த ஓய்வூதி யம் மறைந்த முதல்வர் ஜெயல லிதாவால் 3 முறை உயர்த்தப் பட்டு தற்போது ரூ.8 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதை மேலும் உயர்த்த கோரிக்கைகள் வந்துள் ளன. இதுபற்றி முதல்வரின் கவனத் துக்கு எடுத்துச் சென்று நடவ டிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.