

நடிகர் கமல்ஹாசனுக்கு திருவோடு அனுப்பும் போராட்டத்தில் இந்து இளைஞர் பேரவையினர் நேற்று ஈடுபட்டனர்.
தனியார் டிவியில் ஒளிரப்பாகி வரும் நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் செயல்பாட்டை விமர்சித்து ஏற்கெனவே காவல்துறையிடம் இந்து இளைஞர் பேரவை புகார் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மதுரையில் நேற்று இந்து இளைஞர் பேரவையினர் இதன் அமைப்பாளர் பார்த்தசாரதி தலைமையில் தபாலில் திருவோடு அனுப்பும் புதிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பார்த்தசாரதி கூறுகையில், ‘குறிப்பிட்ட மதக்கடவுளை மட்டுமே கமல் ஹாசன் விமர்சிக்கிறார். அவரது செயல்பாடு குறிப்பிட்ட சிலருக்கு எதிராகவே உள் ளது. அவருக்குத் தேவை பணம். இதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார். இதனால் அவருக்கு திருவோடு ஏந்தி பிச்சை எடுத்தும், அதில் சேர்ந்த பணம் மற்றும் திருவோடை கமல்ஹாசனுக்கு தபாலில் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார்.