உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அவமதிப்பு வழக்கு: முன்னாள் தேர்தல் ஆணையர், 5 ஐஏஎஸ்கள் பதில் அளிக்க உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அவமதிப்பு வழக்கு: முன்னாள் தேர்தல் ஆணையர், 5 ஐஏஎஸ்கள் பதில் அளிக்க உத்தரவு
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாதது தொடர்பாக திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் உள்ளிட்ட 6 ஐஏஎஸ் அதிகாரிகளும் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக நடக்க இருந்த உள்ளாட்சித் தேர் தலை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் ரத்து செய்து, டிசம்பர் இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தர விட்டார். இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்தது.

இதற்கிடையே, தேர்தல் ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி யில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மே 14-ம் தேதிக்குள் கண்டிப்பாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், தனி நீதிபதி விதித்த நிபந்தனைகளை முறையாகக் கடைபிடித்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய வாக்காளர் பட்டியலை ஆன்லைன் மூலமாக சரிபார்க்கவேண்டி இருப்ப தால், ஜூலைக்குள் தேர்தலை நடத்தி விடுவதாக உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது.

இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது:

உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டபடி மே 14-ம் தேதிக் குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்காத முன்னாள் மாநில தேர்தல் ஆணை யர் சீத்தாராமன், மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கே.பனீ்ந்திர ரெட்டி, பேரூராட்சிகள் இயக்குநர் கே.மகர பூஷணம், சென்னை மாநகராட்சி ஆணையர் டி.கார்த்திகேயன் ஆகி யோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கள், இதுதொடர்பாக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் சீத்தா ராமன் உள்ளிட்ட 6 ஐஏஎஸ் அதிகாரி களும் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in