

மதுரையில் கொலைக்கு திட்டமிட்ட இளைஞர், வழிப்பறி திருடர்களை பிடிக்க உதவிய சிறுவன், தொழிலாளர் ஆகியோரை நகர் காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் கடந்த 21-ம் தேதி காரில் அரிவாள், துப்பாக்கிகளுடன் சென்று ஒரு கும்பல் கொலை செய்ய திட்டமிட்டது. இதை அறிந்த தெப்பக்குளம் போலீஸ் உதவி ஆய்வாளர் சக்தி மணி கண்டன், தலைமை காவலர்கள் காதர் இப்ராகிம் ஷா, அன்பு, முருகன், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சின்னக்கருத்த பாண்டியன் ஆகியோர் அக்கும்பலைச் சேர்ந்த மதுரை வண்டியூர் வேல்முருகன்(27) என்பவரை விரட்டிப் பிடித்து ஆயு தங்களை பறிமுதல் செய்தனர்.
அதே நாளில் மதுரை குருவிக்காரன் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற தெற்குவாசல் முத்துவேல்(35) என்பவரை வழிமறித்து செல்போன் பறித்த இரண்டு பேரை, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேஷ் விரட்டிப் பிடித்தார்.
மதுரை கீழநாப்பாளையம் வெற்றிலைக் கடை தெரு சந்திப்பில் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்ற தீபா(38) என்ற பெண்ணை கடந்த 23-ம் தேதி மிரட்டி நகை பறித்துச் சென்ற கீரைத்துறை ராஜா (22) என்பவரை பிடிக்க, அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் சுதர்சன்(14), சுமை தூக்கும் தொழிலாளிகள் சின்னான், அய்யனார், மயில் ஆகியோர் பெரிதும் உதவினர்.
இவர்களை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டி, நற்சான் றிதழ்கள் வழங்கினார்.