Published : 30 Jul 2017 09:49 AM
Last Updated : 30 Jul 2017 09:49 AM

ஓவியர் வீரசந்தானம் நினைவேந்தல் நிகழ்ச்சி: சென்னையில் நாளை நடக்கிறது

தமிழ்த் தேசியப் போராளி யாகவும், தமிழ் ஈழ ஆதரவாள ராகவும் திகழ்ந்த ஓவியர் வீரசந்தானம் கடந்த ஜூலை 13-ம் தேதி காலமானார். தனது கடைசி காலம் வரையில் தமிழ்த் தேசியம் மற்றும் ஈழ விடுதலை பற்றி பேசிய வீரசந்தானம், தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற் றத்துக்கு தனது ஓவியத் திற மையால் உயிர் கொடுத்தவர்.

இந்த நிலையில் ஓவியர் வீரசந் தானம் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நாளை (ஜூலை 31) மாலை 3 மணிக்கு நடக்கிறது.

இந்த நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ம.நடராசன், பேராசிரியர் நாகநாதன், கொளத்தூர் மணி, பெ.மணிமாறன், கோவை ராமகிருஷ்ணன், தியாகு, த.வெள்ளையன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்ல கண்ணு தலைமை தாங்குகிறார். தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலை வகிக் கிறார். ஓவியர் வீரசந்தானத்தின் படத்தை கவிஞர் காசிஆனந்தன் திறந்து வைக்கிறார். இயக்குநர் வ.கவுதமன் வரவேற்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x