

கொசுக்களை விரட்ட தமிழகம் முழுவதும் வீடுகள்தோறும் நொச்சி செடிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
வீடுகளில் இரவில் மிக முக்கியத் தொல்லையாக அமைவது கொசுக் கள்தான். எத்தனை விதமான முயற்சிகளுக்கும் ஈடுகொடுக்கும் இந்த கொசுக்களை விரட்ட பொது மக்கள் கடுமையாக போராட வேண்டியுள்ளது. ரசாயன ‘லிக்வி டேட்டர்’கள், கொசு அடிக்கும் மின்சார ‘பேட்’, கொசு வலை என, கொசுக்களை விரட்டும் உபகர ணங்களுக்கு மட்டும் ஒவ்வொரு மாதமும், அனைவரும் அதிகமாக செலவிடுகின்றனர்.
இன்று, நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளைப் பயன் படுத்துவதால், சருமம், கண்கள் மற்றும் நுரையீரலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு கொசு வர்த்தி சுருள் எரியும்போது, அது வெளியிடும் சாம்பலின் அளவு, 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்குச் சமம். கேடு கள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளைப் பயன் படுத்துவதைவிட, வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து இயற்கை முறையில் கொசுக்களை விரட்டலாம்.
இதனால் கொசுக்கள் அழிவதோடு, உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இதற்காக தமிழக அரசு, சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. தமிழகத்தில் உள்ள, 385 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப் பட்டுள்ள நாற்றாங்கால்களில், 4 முதல் 6 மாத காலத்துக்கு வளர்க் கப்பட்ட நொச்சி செடிகளை, கிராமப் புறங்களில் வசிக்கும் 40 லட்சம் குடும்பங்களுக்கு வழங்க உள்ள னர். குடும்பம் ஒன்றுக்கு தலா 2 செடிகள் வீதம் இலவசமாக வழங்கப்படும்.
தற்போது காஞ்சிபுரம் மாவட் டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத் தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பயனாளிகளைக் கொண்டு, மண்ணிவாக்கம் ஊராட்சி யில் தற்போது செடி வளர்க்கும் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: தற்போது கொசுவினால் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உருவாகிறது. இவற்றை ஒழிப்பதற்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனா லும் கொசுவை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இயற்கை முறையில் கொசுவை விரட்டு வதற்கு நொச்சி செடி சிறந்தது. சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்ற நோய்களைப் பரப்புகிற ஏடிஎஸ் கொசுக்களுக்கு நொச்சி இலையின் வாசனை ஆகாது. அனைத்து வகை மண்ணிலும் இந்தச் செடி வளரும். இந்த மூலிகைச் செடிகளை ஆடு, மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் நெருங்காது.
இதனால் ஒவ்வொரு வீடுகளும் 2 நொச்சிக் கன்றுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட் டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஓர் ஊராட்சியைத் தேர்வு செய்து, செடியை வழங்க திட்டமிடப்பட்டு தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இன் னும் ஓரிரு வாரங்களில் நொச்சி செடிகள் வீடுகள்தோறும் வழங்கப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.