பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் லஞ்சம்: ஆர்டிஓ, தாசில்தார், ஆர்ஐ கைது

பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் லஞ்சம்: ஆர்டிஓ, தாசில்தார், ஆர்ஐ கைது
Updated on
1 min read

பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய தாம் பரம் கோட்டாட்சியர், ஆலந்தூர் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கு.மோகனசுந்தரம் (64). பரங்கிமலை பட் ரோட்டில் மனைவி தனலட்சுமி பெயரில் கடந்த 4 மாதங்களாக பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். அரசுக்கு சொந்த மான இடத்தில் இருப்பதால் பெட் ரோல் பங்கை மூட வேண்டும் என மோகனசுந்தரத்திடம் ஆலந்தூர் வருவாய் ஆய்வாளர் முத்தழகன், தாசில்தார் தனசேகரன் ஆகியோர் கூறியுள்ளனர். பெட்ரோல் பங்க்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என் றால் ரூ.2.5 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் சீல் வைத்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதுபற்றி ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸில் மோகனசுந்தரம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்புப் புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளர் குமரகுரு மேற் பார்வையில் ஆய்வாளர் வள்ளி நாயகம், ராமச்சந்திர மூர்த்தி, கந்த சாமி ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட தவணையாக ரூ.1 லட்சம் தருவதாகவும் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பணத்தை தருவதாகவும் தாசில்தாரிடம் மோகனசுந்தரம் கூறி யுள்ளார். அதன்படி, நேற்று முன் தினம் இரவு லஞ்ச ஒழிப்பு போலீ ஸார் கொடுத்தனுப்பிய ரூ.1 லட் சத்துடன் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்ற மோகன சுந்தரம், தாசில்தார் தனசேகர னிடம் பணத்தை கொடுத்துள் ளார்.

தாசில்தாரும் வருவாய் ஆய் வாளரும் சேர்ந்து அந்தப் பணத்தை கோட்டாட்சியர் (ஆர்டிஓ) ரவிச்சந் திரனிடம் கொடுத்துள்ளனர். பின் னர் கோட்டாட்சியர் ரவிச்சந்திர னுக்கு 50 ஆயிரம், தாசில்தார் 30 ஆயிரம், வருவாய் ஆய்வாளர் முத்தழகன் 20 ஆயிரம் என பிரித் துக் கொண்டனர். அப்போது அலு வலகத்தின் வெளியே இருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி யாக உள்ளே நுழைந்து கோட்டாட் சியர், தாசில்தார், வருவாய் ஆய் வாளர் ஆகிய 3 பேரையும் கையும் களவுமாக கைது செய்தனர். 3 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பிறகு 3 பேரையும் நேற்று காலை செங் கல்பட்டு முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி தேவநாதன் முன்பு ஆஜர்படுத்தினர். அவர் களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். லஞ்ச வழக்கில் 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்ட விவகாரம், வருவாய்த் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in