

சேலம் மாவட்டம் ஆத்தூர் சார்பு நீதிமன்ற பெண் நீதிபதி நேற்று காரில் சென்றபோது சாலை விபத்தில் இறந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி தேவி(46). இவருடைய கணவர் குமார் ராஜா, வழக்கறிஞராக உள்ளார். நாகலட்சுமி தேவி அவரது கணவருடன் காரில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு வழக்கு விசாரணைக்காக சென்று விட்டு, ஊர் திரும்பிக் கொண் டிருந்தனர்.
ஆத்தூர் அருகே மல்லியக்கரை கோபாலபுரம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிளில் வந்தவர் மீது மோதாமல் இருக்க குமார் ராஜா, காரை வலது புறமாக திருப்பியதில் தரை பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதியது. இதில் சார்பு நீதிமன்ற நீதிபதி நாலட்சுமி தேவி பலத்த காயம் அடைந்து இறந்தார். இந்த விபத்து குறித்து மல்லியக்கரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.