

சென்னை பன்னாட்டு இளை ஞர் திருவிழா ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இளைஞர் வளர்ச்சி சங்கம், இந்திய அரசின் நகர வளர்ச்சி அமைச்சகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச் சகம், நிதி அமைச்சகம் ஆகி யவை இணைந்து சென்னை பன்னாட்டு இளைஞர் திரு விழாவை நடத்துகின்றன. தமி ழகம் முழுவதும் 70-க்கும் மேற் பட்ட இடங்களில் ஆகஸ்ட் 4 முதல் 20 வரை இந்த திருவிழா நடக் கும். நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் பல்வேறு அரங் குகளில் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள், கல்வி சார் நிபுணர் கள், விளையாட்டுச் சாதனை யாளர்கள், கலைஞர்கள், பத்திரிக் கையாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். இதில் பயிலரங் குகள், கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடை பெறும். தங்களுக்குள் உள்ள திறமைகளை வெளிப்படுத்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவதுடன், தேவையான ஆதாரங்களை அளிப்பது இந்த திருவிழாவின் நோக்கம் என்று இளைஞர் வளர்ச்சி சங்கம் தெரிவித்துள்ளது.