

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர் களுக்கு பட்டா வழங்குவதை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளதால், வேறு இடத்தில் இலவச பட்டா வழங்கப்படுகிறது என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் பேசும்போது, ‘‘கிராம நத்தம், நத்தம் புறம்போக்கு நிலங்களில் பட்டா வழங்கப் படுவதில்லை. என் தொகுதிக் குட்பட்ட பெருங்குடியில் உள்ள கல்லுக்குட்டையில் 350 ஏக்கரில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் வசித்து வருகின் றனர். அவர்களுக்கு பட்டா வழங்குவதுடன், சாலை உள் ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்’’ என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச் சர் ஆர்.பி. உதயகுமார் பேசும் போது, ‘‘இலவச பட்டா வழங்க முதலில் ஆண்டுக்கு ஒரு லட்சம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டி ருந்தது. தற்போது ஆண்டுக்கு மூன்றரை லட்சம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட இலவச பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளன.
நீர்நிலைகளில் ஆக்கி ரமிப் பாளர்களுக்கு பட்டா வழங் கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, அவர்களுக்கு மாற்று இடங்களில் இலவச பட்டாக்களை அரசு வழங்கி வருகிறது’’ என்றார்.