மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்: சென்னையில் நாளை முதல் 17 வரை நடக்கிறது

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்: சென்னையில் நாளை முதல் 17 வரை நடக்கிறது
Updated on
1 min read

மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளைமுதல் 17-ம் தேதி வரை 10 மண்டலங்களில் உள்ள சென்னைப் பள்ளிகளில் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் கல்வி இயக்ககம் (சென்னை மாவட்டம்) மூலமாக ஒரு வயது முதல் 18 வயது வரையுள்ள செவித்திறன் குறைபாடு, பார்வைத்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம் நாளைமுதல் 10 மண்டலங்களில் நடைபெறவுள்ளது.

முகாமில் குழந்தைகளை பரிசோதனை செய்து மாற்றுத்திறன் கொண்ட குழந்தை களுக்கு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்வார்கள்.

இம்முகாமுக்கு வருபவர்கள் குழந்தை களின் 4 புகைப்படம், வருவாய் சான்றிதழ், மருத்துவச் சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றின் நகல் எடுத்து வர வேண்டும். முகாம் சென்னைப் பள்ளிகளில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

தண்டையார்பேட்டை (மண்டலம் 4) (தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி - 9788858510, 9043988081, 9176489291), ராயபுரத்தில் (மண்டலம் 5) (9788858511, 9940271699, 8939054856) நாளைக்கும் (ஜூலை 12), திரு.வி.க.நகர் (6) 9788858513, 9884554932, 9790741543), தேனாம்பேட்டையில் (9) (9788858515, 9655008261, 8939254871) 13-ம் தேதியும், ராயபுரம் (5) (9788858512, 7401606664, 9445322173)), கோடம்பாக்கத்தில் (10) (9788858517, 9940211634, 9445322173)14-ம் தேதியும், அண்ணாநகர் (8) (9788858514, 9841889069, 8325067494, தேனாம்பேட்டையில் (9) (9788858516, 9941385747, 9176383727) 15-ம் தேதியும், கோடம்பாக்கம் (10) (9788858518, 9941440131, 9789081918), அடையாறில் (மண்டலம் 13) (9788858519, 9444739977, 9092890370) 17-ம் தேதியும் நடைபெறும் என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in