கடலில் எண்ணெய் கசிந்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 8 வாரங்களுக்குள் இழப்பீடு - தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கடலில் எண்ணெய் கசிந்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 8 வாரங்களுக்குள் இழப்பீடு - தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
Updated on
1 min read

எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி ஏற்பட்ட கப்பல் விபத்தால் கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் சென்னை கடலோரப் பகுதியில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை சரி செய்ய வேண்டும்.

அச்சம்பவத்தால் வாழ்வா தாரத்தை இழந்த மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி, சென்னையைச் சேர்ந்த எம்.ஆர்.தியாகராஜன், சரவண தட்சிணாமூர்த்தி, அஸ்வினி குமார், பி.சோமசுந்தரம் ஆகி யோர் தனித்தனியே தாக்கல் செய்திருந்த மனு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர் வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்டோருக்கு வழங் கப்படும் இழப்பீட்டை, பாதிக் கப்பட்ட நபர்களுடன் மீண்டும் கூட்டம் நடத்தி, யாரேனும் விடு பட்டிருந்தால் அவர்களுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனுக்கள், அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, ‘‘தமிழக அரசு தோராயமாக கணக்கிட்டு சுமார் ரூ.203 கோடி இழப்பு ஏற்பட்டி ருக்கும் என்று கூறி வருகிறது. மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கியுள்ளது. தமிழக அரசு, விடுபட்டவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து, 2 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்ட மீனவர்களை அடையாளம் கண்டு, விபத்துக்குள்ளான கப்பல் காப்பீட்டு நிறுவனத்திடம் பணத்தை பெற்று, அடுத்த 6 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப் பீட்டு தொகைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in