

செய்யது பீடி நிறுவனம் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி செலுத்தாமல் மறைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்யது பீடி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரின்பேரில், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஜூன் மாதம் 28, 29-ம் தேதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 63 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சுமார் ரூ.161 கோடிக்கு வரி செலுத்தாமல் ஏமாற்றியிருப்பதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. ரூ.5 கோடி பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், சென்னை பெல்ஸ் சாலையில் உள்ள அக்குழுமத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களை கைப்பற்றி இருக்கிறோம்” என்றார்.