Last Updated : 17 Jul, 2017 11:28 AM

 

Published : 17 Jul 2017 11:28 AM
Last Updated : 17 Jul 2017 11:28 AM

விவசாயிகளுக்கு விரைந்து கிடைக்குமா வறட்சி நிவாரணம்?

உடுமலை பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் கடத்தி வருவதாக பல்வேறு விவசாய அமைப்பின் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலேயே உடுமலை கோட்டத்தில் மிக அதிக அளவில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, மக்காச் சோளம், கரும்பு, வாழை, பயறு வகை பயிர்கள், கீரைகள், காய்கறி கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் மூலம் இப்பகுதி விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக முன் எப்போதும் இல்லாத அளவிலான வறட்சி நிலவுகிறது.

தென்னையைக் காக்க லாரி களில் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றிய பின்பும் பிரச்சினை தீராத தால் பலரும் அந்த முயற்சியை கைவிட்டனர். அதனால் உடுமலை சுற்று வட்டாரத்துக்கு உட்பட்ட 7 குளங்கள் பாசனப்பரப்பை தவிர்த்து பிற பகுதிகளில் தென்னைகள் காய்ந்து வருகின்றன.

இந்நிலையில் அரசு அறிவித்த வறட்சி நிவாரணம், பல மாதங்கள் ஆகியும் விவசாயிகளுக்கு வழங்கப் படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநிலத் தலைவர் வேலாயுதம் கூறியதா வது: உடுமலை பகுதியில் வருவாய்த்துறை மூலமாக கணக் கெடுப்பு நடைபெற்றது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் யாருமே முறையாக இப்பணியில் ஈடுபடவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் முழு விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. 20 ஏக்கர் தென்னை பாதிக்கப்பட்ட சம்பவத்தில் இழப்பீடாக ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சிலருக்கு ரூ.37,000 வரை வழங்கப் பட்டுள்ளது. பெரும்பாலானவர் களுக்கு குறைந்தபட்ச தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை.

வறட்சி நிவாரணத் தொகை எதனை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு வருவாய்த்துறையினர் பதில் அளிக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பரமசிவம் கூறியதாவது: தற்போது நடைபெற்று முடிந்த கணக்கெடுப்பு எதுவும் முறையாக இல்லை என்பதை தொடக்கம் முதலே கூறி வருகிறோம். உடுமலை யில் 7 குளங்கள் அடங்கிய பாசனப் பரப்பை தவிர்த்து பிற பகுதிகளில் 98 சதவீத தென்னைகள் தண்ணீர் இன்றி காய்ந்து கருகிவிட்டன. ஆனால், இது குறித்து முழுமையான விவரம் அதிகாரிகளிடம் இல்லை. தமிழக அரசு அறிவிப்பின்படி திருப் பூர் மாவட்டத்துக்கு ரூ.134 கோடி வறட்சி நிவாரணமாக அறிவிக் கப்பட்டது. அதில் ரூ.81 கோடி விநியோகிக்கப்பட்டுவிட்ட தாக முந்தைய ஆட்சியர் தெரிவித் தார். இதில் வழங்க வேண்டிய மீதித் தொகை ரூ.53 கோடி பல மாதங்கள் ஆகியும் வழங்கப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகத்திலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றார்.

வேளாண் உதவி இயக்குநர் வெங்கடாச்சலம் கூறும்போது, ‘வருவாய்த் துறையினரின் கணக் கெடுப்புக்கு தேவையான உதவி களை இத்துறை மேற்கொண்டது. எத்தனை தென்னை மரங்கள் இருந்தன? அதில் எத்தனை மரங்கள் காய்ந்துள்ளன? எத்தனை அழிந்து விட்டது? என்பது போன்ற புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படவில்லை’ என்றார்.

வருவாய்த்துறையினர் கூறும் போது, ‘உடுமலை பகுதியில் பாதிக் கப்பட்ட 12,000 பேரின் (விவசாயி கள்) பட்டியல் மாவட்ட நிர்வாகத் துக்கு அனுப்பப்பட்டு, அதன் அடிப் படையில் ரூ.10 கோடி நிவாரணத் தொகை கிடைப்பதற்கான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பய னாளிகளின் பட்டியல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளது. தேவைப் படுவோர் நேரில் வந்து அறிந்து கொள்ளலாம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x