

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர், ஜூன் 14-ம் தேதி தொடங் கியது. ஜூலை 19-ம் தேதி (இன்று) வரை கூட்டத் தொடரை நடத்து வது என அலுவல் ஆய்வுக் குழு வில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, பேரவைக் கூட்டம் இன்றுடன் முடிகிறது. இன்று கேள்வி நேரம் கிடையாது. பேரவை கூடியதும் பொதுத்துறை, மாநில சட்டப்பேரவை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுகால நன்மைகள் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கும்.
அதன்பின், கடந்த 24 நாட்களில் தாக்கல் செய்யப்பட்ட பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்த மசோ தாக்கள், வாடகை முறைப்படுத்தும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்ட மசோதாக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படு கின்றன. கணக்கு தணிக்கை துறை தலைவரின் அறிக்கையும் இன்று சமர்ப்பிக்கப்படும்.