Last Updated : 28 Jul, 2017 09:09 AM

 

Published : 28 Jul 2017 09:09 AM
Last Updated : 28 Jul 2017 09:09 AM

பெட்ரோல் கெமிக்கல் மண்டலத்தால் கடும் பாதிப்பு ஏற்படுமா?- கடலூர், நாகை மாவட்டங்களில் விவசாயிகள், மீனவர்கள் அச்சம்

கடலூர், நாகை மாவட்டங்களில் சில பகுதிகள் பெட்ரோல் கெமிக் கல் மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளதால் அதிர்ச்சியடைந் துள்ள இப்பகுதி மக்கள், இந்த அறிவிப்பால் தங்களது வாழ்வா தாரம் பாதிக்கப்படும் எனவும், மீன் பிடி தொழில், விவசாயம் அழிந்து போகும் ஆபத்து இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

23 ஆயிரம் ஹெக்டேர்

தமிழக அரசின் மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 ஊராட்சிகளை உள்ளடக்கிய 23 ஆயிரம் ஹெக்டேரில் (சுமார் 57 ஆயிரம் ஏக்கர்) ரூ.92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய பொருட் கள் உற்பத்திக்கான முதலீட்டு மையம் தொடங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.1,146 கோடியை ஒதுக்கி, பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு மாநில அரசின் அனுமதியைப் பெற, மத்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டே ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இதற்கு தமிழக அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஒப்புதல் அளித்து மேற்கண்ட இடத்தையும் தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோலிய பொருட்களைச் சுத்திகரிப்பு செய்வதற்கு இப்பகுதியில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்ய அருகிலேயே சிறு துறைமுகங்களும் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கானோர் பாதிப்பு

இந்நிலையில், இப்பகுதிகளில் பெட்ரோலிய தொழிற்சாலைகள் அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப் படுவதோடு, சிறு துறைமுகங் களால் மீனவ கிராமங்கள் கடுமை யாக பாதிக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இந்த பெட்ரோலிய கெமிக்கல் மண்டலத்தில் எண்ணெய்க் கிணறு களோ, எரிவாயுக் கிணறுகளோ அமைக்கப்படாது. சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமே அமைக்கப் படும் என்று என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும், ‘அந்த சுத்திகரிப்பு நிலையங்களுக்காக ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும். இதனால் கடல் நீர் உட்புகுந்து கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும், விவசாயம் அழியும் நிலை ஏற் படும்’ என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

இந்த பெட்ரோல் கெமிக்கல் திட் டம் குறித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் இளங்கீரன் கூறும்போது, ‘‘இந்த திட்டம் கடலூர் மாவட்ட விவசாயத்தை அழிக்க வந்த திட்டம் ஆகும். இத்திட்டத்தால் குடிநீர் பஞ்சம் ஏற்படும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக் கப்படும். கடலூர் மாவட்ட விளை நிலங்கள் தரிசாக போய்விடும். இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும்'' என்றார்.

''விவசாயத்தை நம்பி தான் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதி உள்ளது. இந்த பகுதியில் நன்கு விளைகின்ற விளை நிலங் களை இந்த திட்டத்தின் கீழ் அரசு கையகப்படுத்தினால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்'' என்கிறார் கும ராட்சி ஊராட்சி ஒன்றிய முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மாமல்லன்.

ஏற்கெனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு போன்றவற்றில் கடல் நீர் உள்ளே புகுந்துள்ளது. இதனால் இதனை ஒட்டியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாக மாறி விவசாயத்தையும், குடிநீர் ஆதாரங்களையும் அழித்து விட்டது.

கடலூர் சிப்காட், பெரியபட்டு அருகில் சாயப்பட்டறை, பரங்கிப்பேட்டை அருகில் அனல் மின் நிலையம் ஆகியவற்றால் கடற்கரையோரப் பகுதிகள் ஏற்கெனவே கடுமையாக பாதிக் கப்பட்டுள்ள நிலையில் இந்த மண்டலமும் வந்தால் கடற் கரையோர மீனவர்கள் ஒட்டு மொத்தமாக நிலைகுலைந்து போவார்கள் என இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x