

வறட்சி காரணமாக விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அறிவித்துள்ளது.
2016-ம் ஆண்டு டிசம்பர் முதல் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், ''வறட்சி காரணமாக 2016 டிசம்பர் முதல் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
போதிய அளவு மழை பெய்த பின், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.