நீட் தேர்வு குறித்து பேசுவதற்காக 4 அமைச்சர்கள் டெல்லி பயணம்

நீட் தேர்வு குறித்து பேசுவதற்காக 4 அமைச்சர்கள் டெல்லி பயணம்
Updated on
1 min read

நீட் தேர்வு குறித்து மத்திய அமைச்சர் களை சந்தித்துப் பேசுவதற்காக தமிழக அமைச்சர்கள் 4 பேர் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இதனை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நீட் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, “நீட் தேர்வு குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசுவதற்காக நாளை டெல்லி செல்கிறோம்” என்று தெரிவித்தார்.

அதன்படி, நீட் தேர்வு குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து பேசுவதற்காக தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்றிரவு 9.15 மணிக்கு சென்னை யில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in