

உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டு களை வரையறை செய்ய தனி ஆணையம் அமைக்க வகை செய் யும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் நிறைவேறியது.
சட்டப்பேரவையில் நேற்று உள் ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது:
வார்டுகள் ஒதுக்குவதில் சிக்கல்
உள்ளாட்சி அமைப்புகளில் 2011 மக்கள் தொகை கணக் கெடுப்பு அடிப்படையில் எஸ்சி, எஸ்டி, பெண்கள் ஆகியோருக்கு வார்டுகளை ஒதுக்குவது மிகப் பெரிய சிக்கலான பிரச்சினையாக உள்ளது.
எனவே, ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் வார்டுகளை ஒதுக்கி தொகுதிகளை வரையறை செய்யவும், பரிந்துரை செய்யவும் தொகுதி வரையறை ஆணையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் உள்ள வார்டுகளில் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு எஸ்சி, எஸ்டி, பெண் களுக்கான வார்டுகளை இந்த ஆணையம் முடிவு செய்து அரசுக்கு பரிந்துரை செய்யும்.
இந்த ஆணை யத்துக்கு தலைவர், உறுப்பினர்கள், உறுப்பினர் - செயலர் மற்றும் பிற பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு
இந்த மசோதா உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர் உ.மதி வாணன், ‘‘தொகுதி வரையறை செய்ய ஆணையம் அமைப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு காலவரையறை எதுவும் நிர்ணயம் செய்யப் படவில்லை. எனவே, இந்த மசோதாவை திமுக எதிர்க்கிறது’’ என்றார். அதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் தொகுதி வரையறை ஆணைய மசோதா நிறை வேறியது.