Published : 14 Jul 2017 09:48 AM
Last Updated : 14 Jul 2017 09:48 AM

பொறியியல் படிப்புக்கு ஜூலை 17-ல் கலந்தாய்வு தொடக்கம்: அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முறை அறிமுகம்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 17-ல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு முதல்கட்ட கலந்தாய்வை ஜூன் 27-ம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டிருந்தது.இதற்கிடையே, நீட் நுழைவுத் தேர்வு விவகாரம் காரணமாக மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தள்ளிப்போனது. இதன் காரணமாக, பொறியியல் கலந்தாய்வை நடத்து வதில் அண்ணா பல்கலைக்கழகத் துக்கு நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், பொறியியல் கலந் தாய்வு காலஅட்டவணையை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பொறியியல் கலந்தாய்வை ஜூன் 27-ம் தேதி தொடங்க திட்டமிட்டிருந் தோம். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளிவர தாமதம் ஆனதால், கலந்தாய்வை தள்ளிவைத்தோம். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 1 லட்சத்து 41 ஆயிரம் மாணவர்களுக் கும் கலந்தாய்வு நடத்த வேண்டு மானால் 35 நாட்கள் தேவைப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை 31-க்குள் கலந்தாய்வை நடத்தி முடித்து ஆகஸ்ட் 1-ம் தேதி வகுப்பை தொடங்கிவிட வேண்டும்.

தற்போது மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் நீட் விவகாரத்தால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இனியும் பொறி யியல் கலந்தாய்வை தள்ளிவைக்க இயலாது. உடனடியாக கலந்தாய்வை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். 19-ம் தேதி மாற்றுத்திற னாளிகளுக்கு கலந்தாய்வு நடக்கும். ஜூலை 19, 20 ஆகிய 2 நாட்கள் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, 21-ம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும்.

பொதுப் பிரிவினருக்கான கலந் தாய்வு, ஜூலை 23-ல் தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும். இதற்கிடையே, துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 16-ம் தேதி விண்ணப்பம் பெறப்பட்டு 17-ம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும். எஸ்சிஅருந்ததியர் பிரிவு இடங்களில் இருந்து எஸ்சி பிரிவுக்கு மாற்றப்படும் இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18-ல் நடைபெறும்.

எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

இந்த ஆண்டு குறுகிய காலமே இருப்பதால் கலந்தாய்வுக்கு தினமும் கூடுதல் மாணவர்கள் வரவழைக்கப்படுவர். வழக்கமாக நடக்கும் 8 அமர்வுகளுக்கு பதிலாக இந்த ஆண்டு 9 அமர்வுகள் நடத்த உள்ளோம். காலை 7 மணிக்கு கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டிய வெளியூர் மாணவர்கள், ஒரு நாளைக்கு முன்னதாக வந்து அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கிக்கொள்ளலாம்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆகஸ்ட் 1-ம் தேதி வகுப்புகள் தொடங் கப்பட வேண்டும். ஆனால், தற்போ தைய நடைமுறை பிரச்சினையை விளக்கி, மாணவர் சேர்க்கைக்கு காலஅவகாசம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளோம்.

பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு (2018-19) முதல் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படும். எனவே, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாண வர்கள் கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்வதற்காக சென்னைக்கு வரத் தேவையில்லை. அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்துகொள்ளலாம். ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகப்படுத்தும்போது கிராமப்புற மாணவர்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்படுவதாக இருந்தால் அதற்கு தேவையான உதவிகளை அரசு செய்யும்.

இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.

பேட்டியின்போது உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ராஜேந்திர ரத்னூ, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ஜெ.இந்துமதி, அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் இயக்குநர் பி.மல்லிகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x