Last Updated : 06 Jul, 2017 11:15 AM

 

Published : 06 Jul 2017 11:15 AM
Last Updated : 06 Jul 2017 11:15 AM

பூட்டிய வீடுகளில் திருட்டை தடுக்க ‘பேசும் சுழல் கேமரா’ தொழில்நுட்பம்

பூட்டிய வீடு, வர்த்தக நிறுவனங் களில் நடக்கும் திருட்டு, கொள்ளை போன்ற குற்றச் செயல்களை தடுக்க பேசும் சுழல் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் வசதி தற்போது அறிமுகமாகி உள்ளது.

பொதுமக்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்கள் காவல் துறையினரால் பல்வேறு முறைகளில் விசாரிக்கப்படுகிறது. குற்ற வகை, அதன் தன்மையை பொறுத்தே காவல்துறையின் விசாரணை அமைகிறது. கொள் ளையர் பட்டியல், ஏற்கெனவே சேகரிக்கப்பட்டுள்ள கை ரேகைகள் ஆகியவையே குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான ஆதாரமாக போலீஸாருக்கு இருந்து வருகி றது.

இதுகுறித்து விரல் ரேகை பிரிவு ஆய்வாளர் (ஓய்வு) சுந்தர் பாபு கூறியது: காவல்துறையில் குற்றச் சம்பவங்கள் 5 வகையாக பிரிக்கப்படுகின்றன. சம்பவ மாதிரியை வைத்து (மாடஸ் ஆப்பரண்டி) 60 வகையாக பிரித்து விசாரிக்கிறோம். பொது வாக வறுமை காரணமாக என்பதைவிட ஆடம்பரங்களை அனுபவிக்க திருட்டுத் தொழிலை சிலர் தேர்ந்தெடுக்கின்றனர். வழக்குகளில் சிக்கி சிறை செல் லும் இளைஞர்கள், அங்கு பிறருடன் பழகி நட்பு ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

இவர்கள் ஜாமீனில் வெளியே வரும்போது வேலைக்கு போக முடியாமல் வழக்கு, பிற செலவுக் கென குற்றச் செயல்களை தொ டர்கின்றனர். இவற்றை தடுக்க, தற்போது சிசிடிவி கேமரா, அலாரம் என நவீன கருவிகள் உதவுகின்றன. இதுபோன்ற பாதுகாப்பு கருவிகளை பூட்டிய வீடு, வங்கிகளில் வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்களில் பொருத்துமாறு அறிவுறுத்து கிறோம்.

நகை, பணம், பொருட்களை பாதுகாப்பதில் மக்களுக்கு தனிப்பட்ட அக்கறை அவசியம். அதற்கு நவீன தொழில்நுட்பம் உதவுகிறது. திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களை ஆண்ட்ராய்டு செல்போன் உதவியுடன் தடுக்கலாம். ஆண்ட்ராய்டு போன் மூலம் வெளியூர்களில் இருந்தும் வீடு, வர்த்தக நிறுவனங்களில் நடப்பதை அறிய முடியும். பூட்டிய வீடு, கடைகளுக்குள் நுழைய முயலும் கொள்ளையர்களை வீடியோவில் பதிவு செய்வது மட்டுமின்றி ஆடியோவிலும் எச்சரிக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் அமைந்துள்ளது.

மேலும், சுழலும் நவீன சிசிடிவி கேமராவும் இதில் உள்ளது. ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள இக்கேமராவை வாசல் உள்ளிட்ட பகுதிகளை கண்காணிக்க பொருத்த வேணடும். இதை நெட் வசதியுடைய ஆண்ட்ராய்டு போனில் இணைத்து, வெளியில் இருந்து வீட்டை கண்காணிக்க முடியும். பூட்டிய வீட்டுக்குள் அந்நியர்கள் நுழையும்போது ஆடியோ மூலம் எச்சரிக்கும்.

கொள்ளையர்கள் கேட், சுவர் ஏறி குதிக்கும்போது, பூட்டை உடைக்கும்போது ஆடியோவில் பேசி, அவர்களை பயமுறுத்த முடியும். உடனே போலீஸார் வருகிறார்கள், அருகில் இருக்கிறேன், வந்துவிடுவேன் என, ஆடியோவில் பேசினால் அவர்கள் அங்கிருந்து ஓடி விடுவார்கள். இதன்மூலம், பல லட்சம் மதிப்புள்ள நகை, பொரு ட்களை காப்பாற்ற முடியும்.

இவ்வாறு சுந்தர்பாபு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x