சுகாதார அமைச்சர் தகவல்: தமிழகத்தில் முதல்முறையாக இளைஞருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு - மக்கள் பீதியடைய வேண்டாம் என வேண்டுகோள்

சுகாதார அமைச்சர் தகவல்: தமிழகத்தில் முதல்முறையாக இளைஞருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு - மக்கள் பீதியடைய வேண்டாம் என வேண்டுகோள்
Updated on
2 min read

தமிழகத்தில் முதல்முறையாக ஜிகா வைரஸால் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாதிக்கப்பட் டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழகத்தில் தொற்றுநோய் பரவுதல், காய்ச்சல், பருவகால நோய்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள குடும்பநல பயிற்சி மையத்தில் நேற்று நடந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் இந்த ஆண்டில் காய்ச்சலால் அதிகமானோர் பாதிக் கப்பட்டுள்ளனர். இதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை தமிழக அரசு எடுத் துள்ளது. அதன் ஒரு பகுதியாக, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர் களின் ரத்தம், சிறுநீர் மாதிரிகள் எடுத்து, சோதனை செய்யப் படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை அருகே அஞ்சட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த நெட்ரா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரின் ரத்தம், சிறுநீர் மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய நுண்ணுயிர் ஆய்வு மையத்தில் சோதனை செய்ததில், அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இதுவே முதல் முறை.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு, அவர் முழுமையாக குணமடைந் துள்ளார். மேலும் 4 பேரின் ரத்தம், சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. அந்த இளைஞரின் கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பிரேசில், கொலம்பியா, தென் அமெரிக்கா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு 2015-ம் ஆண்டு ஜிகா வைரஸ் பரவி யது. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ஜிகா வைரஸால் 3 பேர் பாதிக்கப்பட்டனர்.

நோய் அறிகுறிகள்

காய்ச்சல், தோல் அரிப்பது, கண் சிவப்பது, மூட்டு வலி, தலை வலி, உடல் சோர்வு ஆகியவை ஜிகா வைரஸ் அறிகுறிகள். இதன் பாதிப்பு 2 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். தமிழகத்தில் ஜிகா வைரஸ் பரவாமல் இருக்க முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜிகா வைர ஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி களுக்கு சிறிய தலை குறைபாடு டன் குழந்தை பிறக்கும் என கூறப் படுவது குறித்தும் விவாதிக்கப்பட் டது. சென்னையில் இதேபோன்ற குறைபாட்டுடன் பிறந்த குழந்தை யிடம் வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருபவர் களுக்கு, அந்நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்படு கிறது. எனவே, பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். ஜிகா வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல் குறித்த தகவல்களை அறிய 044-24350496, 044-24334811, 9444340496, 9361482899 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

டெங்கு காய்ச்சல்

கேரளாவில் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது. அதன் தாக்கத்தால் அந்த மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் 12 மாவட் டங்களில் டெங்கு பாதிப்பு உள் ளது. டெங்கு காய்ச்சலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வுக் கூட்டத்தில் சுகா தாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் (டிபிஎச்) க.குழந்தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, மருத்துவம், ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் (டிஎம்எஸ்) பானு, மத்திய அரசின் சுகாதார ஆராய்ச்சித் துறை செயலாளர் சவுமியா சுவாமிநாதன், தமிழக மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் பு.உமா நாத், அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனைகளின் முதல்வர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in