Published : 15 Jul 2017 08:01 AM
Last Updated : 15 Jul 2017 08:01 AM

கட்டிட வாடகையை முறைப்படுத்த புதிய சட்டம்: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

கட்டிடங்களின் குத்தகை, வாட கையை முறைப்படுத்தும் புதிய சட்ட மசோதா, தமிழக சட்டப் பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில், ‘தமிழ்நாடு கட்டிடங்கள் குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாடு சட்டம்’ கடந்த 1960-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. தற்போது கட்டுமானத் தொழில் வளர்ந்துவிட்டது. குடியி ருப்புகள், வணிக கட்டிடங்கள் அதிகரித்துள்ளன. பழைய வாடகை கட்டுப்பாடு சட்டம், தற்போதைய சூழலுக்கு பொருத்த மானதாக இல்லை. இதுதவிர, நடைமுறையில் உள்ள வாடகை கட்டுப்பாடு சட்டம், நில உரிமையாளரின் நலனுக்கு எதிராக உள்ளது. எனவே, இந்த சிக்கல்களை தீர்க்கும் வகையில் பழைய குத்தகை, வாடகை கட்டுப்பாடு சட்டத்தை நீக்கி, புதிய சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்தில் தற்போதுள்ள வாடகை கட்டுப் பாடு சட்டத்தை நீக்கவும், அதே நேரத்தில் தற்போதுள்ள சூழலுக்கேற்ப புதிய சட்டத்தை கொண்டுவரவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று அறிமுகப்படுத்தினார்.

இச்சட்டத்தில் குத்தகை உரிமை ஒப்பந்தம், கால அளவு, வாரிசு உரிமை, உள்வாடகைக்கான கட்டுப்பாடுகள் வகுக்கப்பட் டுள்ளன. மேலும், செலுத்தப்பட வேண்டிய வாடகையை மாற்றி அமைப்பது, அதற்கான வாடகை அதிகாரி, பிணைத் தொகை வைப்பீடு, வாடகை ஒப்பந்தம், வாடகை ரசீது, சொத்து பழுது பார்ப்பு, பராமரிப்பு, காலி செய்யாத பட்சத்தில் நஷ்டஈடு உள்ளிட்டவை குறித்து இந்த மசோதாவில் விளக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x