

அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா மீதான கடைசி வழக்கில் நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப் பட்டது.
ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் 4 வழக்குகளை கடந்த 1996-ல் பதிவு செய்தனர்.
இதில் 3 வழக்குகளில் ஏற்கெனவே பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் காணொலி காட்சி மூலமாக எழும்பூர் நீதிமன்றம் குற்றச்சாட்டினைப் பதிவு செய்தது.
நேற்று கடைசி 4-வது வழக்கில் சசிகலாவிடம் காணொலி காட்சி மூலமாக நீதிபதி ஜாகிர்ஹூசைன் குற்றச்சாட்டினைப் பதிவு செய்தார். இந்த விசாரணை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
பி்ன்னர் இந்த வழக்கு விசாரணையை மற்ற வழக்குகளோடு வரும் ஜூலை 13-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.