கதிராமங்கலத்தில் கைதான 10 பேருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு கடும் எதிர்ப்பு
கதிராமங்கலம் கலவரம் தொடர்பாக கைதான 10 பேருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக கடந்த 30-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. இதுதொடர்பாக பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி பஷீர் அகமது முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் ராமர் ஆ்ட்சேபம் தெரிவித்தார். ‘கதிராமங்கலம் கலவரத்தில் காயமடைந்த காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஓஎன்ஜிசி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது’ என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
