

கோயில் நிலங்களில் குடியிருப் போர் வாடகையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் அலெக் சாண்டர் (அம்பத்தூர்) எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ‘‘கோயில் நிலங் களில் குடியிருப்போருக்கு சந்தை மதிப்பு அடிப்படை யில் வாடகை நிர்ணயிக்கப் பட்டு வசூலிக்கப்பட்டு வரு கிறது.
இது மிக அதிகமாக இருப்பதாக கோயில் நிலங் களில் குடியிருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி வாட கையை குறைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.