எம்எல்ஏக்களுக்கு நீரா பானம் விநியோகம்

எம்எல்ஏக்களுக்கு நீரா பானம் விநியோகம்
Updated on
1 min read

சட்டப்பேரவை உணவகத்தில் எம்எல்ஏக்களுக்கு நீரா பானம் விநியோகிக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி, தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கியது. அப்போது பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘பேரவையில் நீரா பானம் தொடர்பாக பேரவை துணைத் தலைவர் அறிவித்த போது, பல உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். தற்போது பேரவை அரங்க உணவு அறையில் நீரா பானம் வைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் சென்று அருந்தலாம்’’ என்றார்.

சிறிது நேரத்தில் அவையை நடத்திக் கொண்டிருந்த பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமனும், ‘‘பேரவை உணவு அரங்கில் நீரா பானம் வைக்கப்பட்டுள்ளது. அனை வரும் அருந்துங்கள்’’ என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நடந்த விவாதம்:

சேகர்பாபு (திமுக):

நீரா பானத்துக்கு நீங்களும் பேரவைத் தலைவரும் பிஆர்ஓவாக மாறிவிட் டீர்கள் போல இருக்கிறது. நீரா பானத்தை குடித்துப் பார்த்தோம். நன்றாகத்தான் இருந்தது.

அமைச்சர் பி.தங்கமணி:

நீங்கள் சொல்வதுபோல பிஆர்ஓவாக இருப்பதில் தவறில்லை. கொங்கு மண்டல மக்கள் வளர்ச்சிக்காக நீரா பானம் உற்பத்திக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இங்கு நாங்கள் காலூன்றி விட்டோம். உங்களால் கால்வைக்க முடியாது. இதன்மூலம் நாங்கள் கொங்கு மண்டலத்தில் மேலும் வலிமை பெறுவோம்.

ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்):

நீரா பானம் நன்றாகத்தான் இருக்கிறது. அதேபோல பதநீருக் கும் அனுமதி அளிக்க வேண்டும்.

மதிவாணன் (திமுக):

தென்னை யில் இருந்து நீரா இறக்குவதை அனுமதித்ததுபோல, பனையில் இருந்து பதநீர் இறக்கவும் அனுமதிக்க வேண்டும்.

அமைச்சர் பி.தங்கமணி:

பதநீர் இறக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

முன்னதாக பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்ததைத் தொடர்ந்து பேரவை உறுப்பினர் கள், செய்தியாளர்கள் என அனைவரும் உணவகத்தில் நீரா பானம் அருந்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in