

சென்னையில் பல்வேறு சில்லறை காய்கறி விற்பனை கடைகளில் ஜிஎஸ்டி வரி விதிப்பு எனக்கூறி, காய் கறிகளின் விலையை உயர்த்தி விற்று வருகின்றனர்.
மத்திய அரசு, ஜூலை 1 முதல் அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரி யால் உணவகங்கள், மின் சாதனங்கள், ஆடைகள் ஆகிய வற்றின் விலை உயர்ந்துள்ளது. இதைக் காரணம் காட்டி சென்னையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப் பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில்லறைக் கடைகள் சில, காய்கறிகளின் விலையை அதிக அளவில் உயர்த்தி விற்று வருகின்றன.
ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு சந்தையில் ரூ.45-க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகள் பல வற்றில் ரூ.60-க்கு விற்கப்படுகிறது. சில கடைகளில் ரூ.80 வரை விற்கப் படுகிறது. இரு தினங்களுக்கு முன்பு ரூ.20 முதல் ரூ.25 வரை விற்கப் பட்ட ஒரு தேங்காய், நேற்று ரூ.40-க்கு விற்கப்பட்டது இது தொடர் பாக வியாபாரிகளிடம் கேட்டபோது, ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால், காய்கறிகளின் விலை உயர்ந்திருப்ப தாக கூறினர். இது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி, வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எம்.தியாகராஜனிடம் கேட்டபோது, ‘‘அழுகும் பொருட்களான காய்கறிகள் அனைத்துக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் கோயம்பேடு சந்தையை பொருத்த வரை, விலை ஏதும் உயர்த்தவில்லை. யாரும் ஏமாற வேண்டாம்’’ என்றார்.
பண்ணை பசுமைக்கடை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘காய்கறிக ளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்ப தால், நாங்கள் விற்கும் காய்கறிகளின் விலையை உயர்த்தவில்லை. காய்கறிகளை மதிப்புக்கூட்டு பொருட்களாக தயாரித்து விற்றால் மட்டுமே வரி விதிப்பு செய்யப்படும். காய்கறிகளுக்கு வரி இல்லை’’ என்றார்.