Published : 30 Jul 2017 08:39 AM
Last Updated : 30 Jul 2017 08:39 AM

சென்னையில் 7 மாதத்தில் 1,919 பேர் சிறையில் அடைப்பு: குட்கா, கஞ்சா போதைப் பொருட்கள் விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை

கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக சென் னையில் கடந்த 7 மாதத்தில் 1,919 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட் களை விற்பனை செய்பவர்கள் இனி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் படுவார்கள் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருட்களை விற்பனை செய்தால் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்த ரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

135 தனிப்படைகள்

குறிப்பாக சென்னையில் கஞ்சா, குட்கா, மாவா விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் ஜெயராமன், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் சாரங்கன் மேற்பார்வையில் 4 இணை ஆணையர்கள் 12 துணை ஆணையர்களின்கீழ் அனைத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 135 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தனிப்படை போலீஸார் சென்னையில் கஞ்சா, மாவா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் தடுக்க தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.

8,885 கிலோ கஞ்சா பறிமுதல்

இதன்படி இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 28-ம் தேதி வரை கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 1,920 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,919 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 8,885 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ரூ.57 லட்சத்து 84 ஆயிரத்து 371 மதிப்புள்ள 84 ஆயிரத்து 964 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாதம் 17 முதல் 28-ம் தேதி வரை மட்டும் 924 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 923 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 7,912 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறும்போது, “கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதிகபட்ச தண்டனை

இனி கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ப வர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய் யப்பட்டு சிறை யில் அடைக்கப்படு வார்கள். பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருள் விற்பனை செய்தால் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x