

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமத்தில் இருந்து சூரிய அஸ்தமன மையம் வரை 10-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இவை போதிய பராமரிப்பின்றி காணப்படுகின்றன. இதில் சுனாமி பூங்காவின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. இந்த பூங்கா சிறப்பான வேலைபாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. சுனாமியில் உறவுகளை இழந்த மக்கள், இங்கு வந்து அஞ்சலி செலுத்தி செல்வர். சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து, சுனாமி ஸ்தூபியில் அஞ்சலி செலுத் துவர்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. பூங் காவின் 3 வாசல்களும் பெரும்பாலான நேரம் பூட்டியே கிடக்கிறது. சுனாமி நினைவு தினத்தன்று மட்டும் சம்பிர தாயத்துக்காக பூங்கா திறக்கப்பட்டு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஸ்தூபி யின் மேல் பகுதி சேதமடைந்துள்ளது. இதுகுறித்து ‘தி இந்து’வில் ஏற்கெனவே வந்த செய்தியால், கடந்த சுனாமி நினைவு தினத்தின்போது ஸ்தூபியை தற்காலிகமாக சீரமைத்து வர்ணம் பூசி னர். அதன்பின் கண்டுகொள்ளாததால் மீண்டும் பாழ்பட்டுள்ளது.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து மணக்குடியை சேர்ந்த மீனவர் சேவியர் கூறும் போது, “சுனாமியின்போது உறவினர் களை பறிகொடுத்தோம். அவர்கள் நினைவாக கடற்கரை கிராமங் களில் பல நினைவு ஸ்தூபிகளும், நினைவிடங்களும் அமைக்கப்பட்டுள் ளன. அங்கு செல்லும்போது இறந்த உறவுகளின் நினைவை ஒரு நிமிடம் கண்ணீர் மல்க பகிர்ந்துகொள்வோம்.
கன்னியாகுமரியில் சுனாமி நினைவிடம் பராமரிப்பற்ற நிலை யில் உள்ளது. இங்குள்ள முக்கிய நுழைவு வாயிலும், கிழக்கு மற்றும் மேற்கு இரும்பு நுழைவு வாயில்களும் துருபிடித்து சிதைந்து காணப்படுகின்றன. உடைந்த பகுதிகளை கயறு, பிற பொருட்களைக் கொண்டு கட்டிவைத்துள்ளனர். பூங்காவை முறையாக சீரமைக்க வேண்டும்” என்றார் அவர்.