ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநகர ஏசி பேருந்து கட்டணம் உயர்வு

ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநகர ஏசி பேருந்து கட்டணம் உயர்வு
Updated on
1 min read

ஜிஎஸ்டியால் மாநகர ஏசி பேருந்து களில் ரூ.1 முதல் ரூ.5 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதற்கு பயணி கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தாம்பரம், பிராட்வே, கோவளம், வண்டலூர், கேளம் பாக்கம், தியாகராயநகர், மாமல்ல புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 100 ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதில், ஆரம்ப கட்டணம் ரூ.15 முதல் அதிகபட்சமாக ரூ.100 வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வழக்கமாக மழைக் காலங் களில் முழு அளவில் ஏசி பேருந்து கள் இயக்கப்பட மாட்டாது. வெயில் சுட்டெரிக்கும்போது ஒட்டுமொத்த ஏசி பேருந்துகளும் முழுமையாக பராமரிக்கப்பட்டு இயக்கப்படும். ஆனால், தற்போது சுமார் 40 ஏசி பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. 60 ஏசி பேருந்துகள் பராமரிப்புப் பணிகளுக்காக ஆங்காங்கே உள்ள பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலை யில், ஜிஎஸ்டி அமலாகியுள்ள நிலையில் மாநகர ஏசி பேருந்து களில் ரூ.1 முதல் ரூ.5 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பராமரிப்பு இல்லாமல்...

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறியதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் ஏசி பேருந்துகள் நீண்ட தூரத்துக்குச் செல்ல வசதியாக இருக்கின்றது. ஆனால், கடந்த சில மாதங்களாக ஏசி பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது. இயக்கப்படும் ஏசி பேருந்துகளி லும் சில நேரங்களில் ஏசி இயங் காது, உள்பகுதியில் ஏசி சரிவர இல்லாமல் இருக்கும்.

இந்நிலையில், தற்போது ஜிஎஸ்டி அமல்படுத்தியுள்ளதால் மாநகர ஏசி பேருந்துகளில் ரூ.5 வரை கட்டணத்தை உயர்த்தியுள் ளனர். அண்ணா பல்கலைக்கழ கத்தில் இருந்து கேளம்பாக்கம் செல்ல ஏசி பேருந்துகளில் ரூ.50 மட்டுமே கட்டணமாக இருந்தது. தற்போது ஜிஎஸ்டியால் ரூ.3 சேர்த்து ரூ.53 ஆக வசூலிக்கின்றனர். பேருந்துகளில் போதிய அளவில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது மக்களை ஏமாற்றும் செயலாகும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in