

தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையில் உதவி பொறியாளர் பணியில் சேர எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 21 பின்னடைவு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி பிஇ வேளாண்மை, பிடெக் வேளாண்மை, பிஎஸ்சி வேளாண்மை பொறியியல் பட்ட தாரிகளும், பிஇ சிவில், மெக்கானிக் கல், புரடக்சன், இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் மற்றும் பிடெக். ஆட்டோமொபைல் இன்ஜினீய ரிங் பட்டதாரிகளும் விண்ணப்பிக் கலாம். இதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது. எழுத்துத் தேர்வு அக்டோபர் 7-ம் தேதி நடை பெறுகிறது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார். தேர்வுக்கான பாடத்திட்டம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.