மாமல்லபுரம் அருகே சாலை சீரமைப்பில் ஈடுபடும் இளைஞர்கள்

மாமல்லபுரம் அருகே சாலை சீரமைப்பில் ஈடுபடும் இளைஞர்கள்
Updated on
1 min read

குளம் சீரமைப்பில் ஈடுபட்டிருந்த வெண்புருஷம் கிராம இளைஞர்கள் தற்போது சாலை சீரமைப்பிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்டது வெண்புருஷம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள 6 குளங்களைக் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சீரமைத்தனர். தற்போது இவர்கள் குடிநீர் குழாய்களை சரிசெய்வது, சீமைக் கருவேல மரங்களை அகற்றி பாதைகளை சீரமைப்பது போன்ற பணிகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து வெண்புருஷம் கிராம இளைஞர் களிடம் கேட்டபோது, ‘எங்கள் கிராமத்துக்கான அடிப்படைத் தேவைகளை எந்த அதிகாரிகளிடம் கேட்டுப் பெறுவது என்று தெரியவில்லை. எனவே, எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 40 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, கிராமப் பணிகளை செய்து வருகிறோம்.

முதற்கட்டமாக எங்கள் கிராமத்தில் இருக்கும் 6 குளங்களை சீரமைத்திருக்கிறோம். இதையடுத்து குடிநீர் குழாய் சீரமைப்பு, பாதைகள் சீரமைப்பு போன்றவற்றில் கவனம் செலுத்திவருகிறோம். சமூக அக்கறையுடனான எங்கள் பணிகளைப் பற்றி ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. இந்தச் செய்தி வெளியான பிறகு, இப்போது எங்கள் கிராமப் பகுதிகளில் எந்தப் பிரச்சினை என்றாலும் பேரூராட்சி நிர்வாகம் கவனிக்கத் தொடங்கி, சரிசெய்யவும் முன் வந்துள்ளது’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in