

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் இருவரும் டெல்லி யில் முகாமிட்டுள்ளனர்.
புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் விஸ்வ ரூபம் எடுத்துள்ளது. இதுதொடர் பாக துணைநிலை ஆளுநர் அனுப் பிய கோப்புகளை பேரவைத் தலைவர் ஏற்காமல், ஆளுநர் செய லகத்துக்கே திருப்பி அனுப்பினார். இந்நிலையில், ஆளுநர் கிரண் பேடி, பேரவைத் தலைவர் வைத்தி லிங்கம் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
பேரவைத் தலைவர் செயல் பாட்டில் கிரண்பேடி தலையிடுவது தொடர்பாக மக்களவை சபா நாயகர் சுமித்ரா மகாஜனிடம் புகார் தெரிவிக்க வைத்திலிங்கம் டெல்லி சென்றுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், கிரண்பேடியின் செயல்பாட்டுக்கு எதிராக பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு புதுச்சேரியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இணையம், முகநூல் என பலவற்றிலும் பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று வாட்ஸ்அப்பில் தெரிவித்துள்ள கருத்து: குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில் டெல்லி சென் றுள்ளேன். அவரது பதவிக்காலம் நிறைவடைவதால் அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களை பணி நிறைவு விழாவில் பங்கேற்க அழைத் துள்ளார்.
ஊடகங்கள், நாளிதழ்களில் வெளியாகும் தகவல்களை பார்க் கையில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சிலர் விரும்புவது தெரிகிறது. நேர்மை யாக, சிறப்பான செயல்களை மேற் கொள்வது அவர்களை இடையூறு செய்வதுபோல் உள்ளது.
இதுபோன்ற சூழலை எனது வாழ்நாள் முழுவதும் பார்த்து வரு கிறேன். மக்களின் நலனுக்கான தீர்வுகளை உண்டாக்கவே நாம் உள்ளோம். எனவே இவை எனக்கு வியப்பை தரவில்லை. நான் கடமையை செய்ய வந்துள்ளேன். சட்டம், விதிகளின்படி செயல் படுவேன். நீதித்துறைதான் அனைத்துக்கும் இறுதி முடிவெடுக்கும் அமைப்பாகும். நாம் அதை எப்போதும் நாடி, உண்மையான தீர்வை பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.