

புழல் மத்திய சிறையில் 2016-2017-ம் கல்வி ஆண்டில் 41 பேர் 8-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இவர்களில் 6 பேர் பெண் கைதிகள். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளிவந்தன. இதில் தேர்வு எழுதிய 41 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண் கைதி அஞ்சலை 331 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தையும், மணிகண்டன் 330 மதிப்பெண் எடுத்து 2-வது இடத்தையும் பிடித்தனர். தேர்ச்சி பெற்றவர்களையும், சிறைப் பள்ளி ஆசிரியர் ராசேந்திரனை யும் சிறைத்துறை தலைவர் சி.சைலேந்திரபாபு பாராட்டினார்.
தமிழகத்தில் உள்ள 14 சிறை களில் 6,030 பேர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை படித்து வருவது குறிப்பிடத்தக்கது.