Published : 29 Jul 2017 14:32 pm

Updated : 29 Jul 2017 14:32 pm

 

Published : 29 Jul 2017 02:32 PM
Last Updated : 29 Jul 2017 02:32 PM

மாணவி வளர்மதியை விடுதலை செய்ய வேண்டும்: மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

 

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம், மாணவி வளர்மதியை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்களை வலியுறுத்தி மதிமுக மாணவர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதிமுக மாணவர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகித்தார்.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1. நீட் தேர்வில் இருந்து நிரந்த விலக்கு கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

2. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவி வளர்மதியை விடுதலை செய்ய வேண்டும்.

3. தஞ்சையில் அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் பத்தாயிரம் மாணவர்கள் சீருடையுடன் பங்கேற்க வேண்டும்.

4. அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் விளக்கப் பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ளும் தீர்மானம்.

5. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கத்துக்கு வரவேற்பு.

6. மதிமுக இதழான சங்கொலி வார ஏட்டுக்கான ஐந்தாண்டுச் சந்தா ரூ.1000 சேர்ப்பு.

7. சீமைக் கருவேல மரங்களை அழிப்பதற்கான தடையை உடைத்த வைகோவுக்குப் பாராட்டு.

8. சீமைக் கருவேல மரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய மாநில- மாவட்ட நிர்வாகிகளுக்குப் பாராட்டு.

9. கல்லூரிகள்தோறும் மறுமலர்ச்சி மாணவர் மன்றம் உருவாக்குதல்.

10. ஆகஸ்ட் 25 - 31 வரை மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் மண்டல கலந்தாய்வுக் கூட்டம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author