ஜிஎஸ்டி வரியில் உள்ள குறைபாடுகள் குறித்து கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

ஜிஎஸ்டி வரியில் உள்ள குறைபாடுகள் குறித்து கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
Updated on
1 min read

ஜிஎஸ்டி குறைபாடுகள் தொடர்பாக ஆகஸ்ட் முதல்வாரம் நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இது தொடர்பாக இன்று நடந்த விவாதத்தில அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:

''ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் 5,12,18,28 என வரி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி பதிவுக்கு 95 சதவீதம் வணிகர்கள் மாறிவிட்டனர். மாறுவதில் பிரச்சினை ஏதும் இல்லை.

ரூ.20 லட்சத்துக்குள் வியாபாரம் செய்வோருக்கு வரி இல்லை. அதற்கு மேல் உள்ளவர்களுக்கும் குறைந்த அளவில் 1 அல்லது 2 சதவீதம் தான் வரிவிதிக்கப்படுகிறது. கையால் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய், பிஸ்கெட் போன்றவற்றுக்கு வரி இருக்காது.

10 லட்சம் பேர் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர ஓட்டல் உரிமையாளர்களின் கோரிக்கையும் வரும் ஆகஸ்ட் முதல் சனிக்கிழமையில் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும்.

தென்னை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு டெட்ரா பேக்கில் வரும் இளநீருக்கு ஜிஎஸ்டியில் விலக்களிக்க வேண்டும். கிரைண்டருக்கு ஜிஎஸ்டியில் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று பேரவை துணைத்தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் ஜிஎஸ்டி மீதான அனைத்து குறைகள் குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in